Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#வேள்வி #சதுர்வேதியன் #பிராமணன் #அந்தணன் #ஐயர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

-- - #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#திருவைந்தெழுத்து #நமசிவாய #கொன்றை #கடுக்கை #ஆத்தி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#கண்டால் #நாயைக் #திருக்கயிலாயக்காட்சி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

- - #68

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

, ,, ,, ,, , ,,

#முருகப்பெருமான் #சிங்கப்பெருமாள் #அண்ணல் #கொண்ட #அமுதுடல் #வீரட்டானம் #வீரட்டத்தலங்கள் #எமபயம் #மரணபயம் #மார்க்கண்டேயர் #திருக்கடவூர் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

-- - #67

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

#ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

-- - #66

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#யந்த்ர #தந்த்ர #மந்த்ர #நீதி #திருமறை #மறை #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#முதல்_சங்கம் #தென்மதுரை #தமிழ் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

#தாண்டவம் #ஆனந்த #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#அண்ணாமலையார் #காணா #முடி #அடி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#கூத்தப்பெருமான் #படலம் #சுமந்த #மண் #பிட்டுக்கு #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#உள்ளபொருள் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#விள்ளு #செறிவு #யாது #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#ஒரு_பாகம் #விரவி #மலைமாது #தவம் #வடக்கிருத்தல் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#அட்டவீரட்ட #திருவதிகை #திரிபுராந்தகர் #எரித்தது #முப்புரம் #மேருமலை #குனிக்குமலை #குன்றம் #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

#குறைவிலாச் #செல்வம் #இலாச் #குறைவு #நாட்டம் #சிவஞான #அடியார் #வேட்ட #வேள்வி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை

-- - #56

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

அழகிய மலர்ச்சோலைகள், எப்போதும் சூழ்ந்திருக்கும் மணம், சுவையான நீரைக் கொண்டு வரும் மழை, விடாது பொங்கி வழியும் பூஞ்சுனை நீர் என்று அண்ணாமலையாரின் இயற்கை அழகை விவரிக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

(இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்திற்கு samicheenan.blogspot.com/2020/ செல்லவும். நன்றி.)

#ஊனமலை #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை

Last updated 5 years ago