ஒரு இயக்கத்தின் முன்பான உழைப்பு என்ன என்பதையும், அதற்கான பொறுமை, திட்டமிடல், எளிய மக்களை அணுகும் முறை, அவர்களுடன் நடத்த வேண்டிய உரையாடல் தன்மை என இவை குறித்தும் அறிந்திட இந்நூல் மிக முக்கியமானது.
வரலாற்றில் ஈடு இணையற்ற முறையில் இவ்வளவு வெற்றி பெற்ற இயக்கத்தின் பின்னான உழைக்கும் மக்களின் திடம், மன உறுதி எல்லாம் கண்டு நாம் வியந்தே போகிறோம்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு ஒரு ரெட் சல்யூட்.
இந்தாண்டு மிக நல்ல வாசிப்புடன் துவங்கியது.
#தமிழ் #TamilMastodon #books #புத்தகம்
#தமிழ #TamilMastodon #books #புததகம
படிச்சு சில வருஷங்களாகியும் அப்படியே பசுமையாய் நிற்கிறாள் பணிக்கரின் பேத்தி. எதையும் எதிர்பாராத அளவற்ற அன்பும், அந்த அன்புடன் தொடர்புடைய குணங்களுமாக . எப்பேர்ப்பட்ட கம்பீரமான ஆளுமை. கம்பீரம் ஆம் கம்பீரம் அதுவே அவள். மாசற்ற அன்பு ஆம் அதுவும் அவள். தியாகம் ஆம் அதுவும் அவள். இன்னமும் வரிக்கு வரி ஞாபகம் இல்லாவிட்டாலும் எவருக்கும் நான் உடனே பரிந்துரைக்கும் ஒரு புத்தகமாக..
Hats off to you sharmila sayyed. வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி.
#books #TamilMastodon #தமிழ் #புத்தகம்
#books #TamilMastodon #தமிழ #புததகம