CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குறைந்தபட்ச ஆதார விலை எப்போதும் இருக்கும் என மோடி சொல்வது உண்மை என்றால், அதற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதை எது தடுக்கிறது. அப்படி ஒரு சட்டம் வந்தால், எதிர்ப்பில்லாமல் ஏகமனதாக நிறைவேற்ற முடியுமே?

#BJPBetrayedFarmers #ModiKissanVirodhi #NoToFarmBills

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துகிறோம் என மோடி பேசுகிறார். உண்மையில் இந்த ஆண்டு கோதுமை கிலோவிற்கு ரூ.50 பைசா என்ற மிகக் குறைவான உயர்வையே மோடி அரசு கொடுத்திருக்கிறது.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புதிய வேளாண் சட்டங்களின் உண்மை அம்பலமாகிவிட்ட நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பாஜக பேச்சாளர்கள் பேச்சை மாற்றுகிறார்கள். ஆனால், சமீப ஆண்டுகளிலேயே மிகக் குறைவான ‘எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்பட்டது இந்த ஆண்டு ராபி மகசூலில்தான்.

#NoToFarmBills #BJPBetrayedIndia #ModiKissanVirodhi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வணிகர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியில் விளை பொருட்களை வாங்குவதற்கு சுதந்திரம் கொடுத்துள்ளனர். இதைத்தான் பாஜக ‘விவசாயிகளுக்கான சுதந்திரம்’ என முன்வைக்கிறது.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவை. அரசமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் இந்த அதிகாரத்தை மீறி வேளாண் சட்டங்களை நுழைப்பது, கூட்டாட்சிக்கு எதிரானது.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒப்பந்த முறை உள்ளிட்ட திட்டங்களால் பாரம்பரிய விவசாய முறை அழியும் ஆபத்து உருவாகும். இதன் மூலம் உணவு பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து உணவுப் பொருட்களை நீக்குவது பெருமளவிலான பதுக்கலுக்கு வழிவகுக்கும். செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் ஆபத்தை உருவாக்கும்.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசே வாபஸ் பெறு. நமக்கு உணவளிக்கும் விவசாயிகளையும், மக்களையும் பட்டியினிலிருந்து பாதுகாக்கப் போராடுவோம்

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இச்சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத நிலை உருவாகும். பொது வினியோக திட்டங்கள் படிப்படியாக நிறுத்தப்படும். தனியார் நிறுவங்களின் பதுக்கல் காரணமாக உணவு பொருட்களின் விலை உயரும். இந்தியாவில் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

#NoToFarmBill #ModiKissanVirodhi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளை பாதுகாக்கும் அனைத்துச் சட்டங்களையும் நீர்க்கச் செய்வதன் மூலம் மோடி அரசு உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் முயற்சிகளை மக்களின் போராட்டங்கள் மூலம் தோற்கடிப்போம்.

#NoToFarmBills #ModiKissanVirodhi #BJPBetrayedFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்த மூன்று சட்டங்களும் விவசாயத்தை கார்பரேட்மயமாக்கல், சர்வதேச சந்தையுடன் விவசாயத்தை இணைத்தல் மற்றும் அரசு கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் செய்வது என்ற மும்முனை தாக்குதலை நடத்துகிறது.

#ModiKissanVirodhi #BJPDestroyingINDIA #NoToFarmBills

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் விநியோகிப்பதற்கான மானியங்களையும் ஒழித்துவிட வழி வகுக்கும். விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் மேல் சிறிதும் கவலையற்ற, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறையாக வேளாண் துறையை மாற்றி அமைக்கும்.

#NoToFarmBills #ModiKissanVirodhi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் நிறுவனங்களும் விளைச்சலை வாங்கி, பதுக்கி வைத்து, அவர்கள் நினைத்த விலையில் விற்க வழிவகுக்கும். இது உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான அரசு கொள்முதலுக்கு முடிவு கட்டும்.

#NoToFarmBills #ModiDestroyingIndia #ModiKissanVirodhi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாடு தழுவிய போராட்டங்களை ஒருங்கிணைக்குமாறு விவசாயிகள் சங்கம் விடுத்த அறைகூவலுக்கு 11 முக்கிய மத்திய தொழிற்சங்கங்களும், பல்வேறு ஊழியர் சம்மேளனங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

#NoToFarmBills #ModiKissanVirodhi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயி விரோதி சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் உள்ள 350 விவசாயிகள் அமைப்புகளால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஒற்றுமையுடன் இந்த சட்டத்தை எதிர்ப்பார்கள்.

#NoToFarmBills #ModiKissanVirodhi

Last updated 4 years ago