நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் தேசிய மொழிகளின் சமத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று 1968ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 - 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம் இன்று. #PRamamurthi #CommunistLeader
அரசியல் வாழ்க்கையில் ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையிலும், 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர், 'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென சட்டமன்றத்தில் பேசியவர் #PRamamurthi